/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை உலா; சுற்றுலா பயணியர் குஷி
/
ஒற்றை யானை உலா; சுற்றுலா பயணியர் குஷி
ADDED : அக் 16, 2024 08:55 PM

வால்பாறை : வால்பாறையில், தேயிலை காட்டில் காலை நேரத்தில் முகாமிட்ட ஒற்றையானையை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, நல்லமுடி, தோணிமுடி, அப்பர்பாரளை, வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், அப்பர்பாரளை தேயிலை எஸ்டேட்டில், நேற்று பகல் நேரத்தில் ஒற்றை யானை முகாமிட்டதால், தொழிலாளர்கள் அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடவில்லை.
இதனிடையே, அந்த வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணியர், ஒற்றை யானை நிற்பதை கண்டு ரசித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர்.