/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நள்ளிரவில் கோவிலுக்கு ஒற்றை யானை 'விசிட்'
/
நள்ளிரவில் கோவிலுக்கு ஒற்றை யானை 'விசிட்'
ADDED : அக் 13, 2024 10:11 PM

வால்பாறை : வால்பாறை அருகே நள்ளிரவில் கோவிலுக்கு ஒற்றையானை விசிட் செய்தது.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் அங்குள்ள பெட்டிக்கடைகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றையானை, நேற்று முன்தினம் இரவு, 12:30 மணி அளவில் ரொட்டிக்கடை ஆலமரம்முனீஸ்வரன் சுவாமி கோவிலுக்கு விசிட் செய்தது. இதை அந்த வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலாபயணியர் படம் பிடித்தனர்.
நீண்ட நேரத்திற்கு பின் யானை புதுத்தோட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிடுவதால், யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.