தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டியூகாஸ்' குளறுபடிக்கு தீர்வு தேவை வேள்வி நடத்தி கடவுளிடம் பிரார்த்தனை

 'டியூகாஸ்' குளறுபடிக்கு தீர்வு தேவை வேள்வி நடத்தி கடவுளிடம் பிரார்த்தனை

 'டியூகாஸ்' குளறுபடிக்கு தீர்வு தேவை வேள்வி நடத்தி கடவுளிடம் பிரார்த்தனை


ADDED : ஜூன் 01, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன (டியூகாஸ்) நிர்வாக குளறுபடிக்கு தீர்வு காண வேண்டுமென, இறைவனிடம் பொதுமக்கள் வேள்வி நடத்தி வழிபட்டனர்.

துடியலுாரில் 'டியூகாஸ்' எனும் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், உரம், பூச்சி மருந்து, விவசாய இடுபொருள்கள், உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் உர லைசென்ஸ் ரத்து, 2024ல் போலி நகைகள் வைத்து, 3.60 கோடி ரூபாய் பணம் பெற்ற விவகாரம் என நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டது.

நேற்று துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில், 'டியூகாஸ்' நிறுவனத்தின் குளறுபடியை சரி செய்ய, இறைவன் அருள்புரிய வேண்டுமென வேள்வி நடந்தது. பங்குதாரர்கள், உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.

வெள்ளக்கிணறு காளிசாமி கூறுகையில், ''போலி நகை விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான்கு மகாசபை கூட்டங்கள் நடக்கவில்லை. இந்த சொசைட்டி சார்பில் விற்பனை பிரதிநிதிகள் நியமனம் செய்ய வேண்டும்.

விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிக்க வேண்டும். குளறுபடிகளுக்கு காரணமாக உள்ள சொசைட்டி நிர்வாக இயக்குனரை பணி மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேள்வி நடத்தப்பட்டது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us