/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடீர் சம்பள குறைப்பு துாய்மை பணி ஸ்தம்பிக்கும்
/
திடீர் சம்பள குறைப்பு துாய்மை பணி ஸ்தம்பிக்கும்
ADDED : நவ 14, 2024 05:06 AM
கோவை,: கோவை கவுண்டம்பாளையத்திலுள்ள அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இக்குடியிருப்புகளில் துாய்மைப்பணி மேற்கொள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக துாய்மைப்பணியாளர்களை நியமித்து பணி மேற்கொள்ளச்செய்து வருகிறது. இப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் சுமார் 7,500 ரூபாய் கிடைத்து வந்தது. ஆனால் நடப்பு மாதம் சம்பளம் வழங்கியபோது 6,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பள குறைப்பு குறித்து எந்த தகவலும் பணியாளர்களிடம் தெரிவிக்கப்படவில்லை இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தனியார் நிறுவனத்திடம் விசாரிக்கிறோம் சம்பளத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறோம்,'' என்றனர்.

