/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணி ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர்

ADDED : டிச 23, 2025 07:24 AM

உடுமலை: பி.ஏ.பி., பாசன திட்டத்திலுள்ள கால்வாய்கள் துார்வாரும் பணியை, கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பாசனத்திட்டத்தின் ஆதாரமாகவும், திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள, பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், 154 பணிகள் மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உடுமலை அருகேயுள்ள மானுப்பட்டி மற்றும் கிளுவன்காட்டூர் கிளைக்கால்வாய்கள் துார்வாரும் பணியை, கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபுசபரீஸ்வரன், உதவிப்பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆய்வு செய்தனர்.