/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு
/
கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு
கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு
கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு
ADDED : அக் 04, 2024 10:26 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, வடசித்துாரை சேர்ந்த விவசாயியான பட்டதாரி இளைஞர் சாய் ஈஸ்வரன். இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்தது.
இதனை அறிந்த சாய் ஈஸ்வரன், ஊரில் உள்ள கிரேனை வரவழைத்து, அதன் ரோப் வாயிலாக கிணற்றில் இறங்கினார். அப்போது, ரோப் பிடி தளர்ந்ததால், அவரும் கிணற்றில் விழுந்தார். கிணற்றினுள் தவித்ததை கண்ட மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி, அவரையும், வளர்ப்பு நாயையும் பாதுகாப்பாக மீட்டனர்.
கையில் காயமடைந்த அவர், பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்றவர், கிணற்றில் தவறி விழுந்ததால் நான்கு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.