/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று நாள் மருத்துவ முகாம் 11,026 பேருக்கு சிகிச்சை
/
மூன்று நாள் மருத்துவ முகாம் 11,026 பேருக்கு சிகிச்சை
மூன்று நாள் மருத்துவ முகாம் 11,026 பேருக்கு சிகிச்சை
மூன்று நாள் மருத்துவ முகாம் 11,026 பேருக்கு சிகிச்சை
ADDED : அக் 18, 2024 11:20 PM
கோவை : மூன்று நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், 213 இடங்களில், 11,026 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக கன மழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வந்தது. இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சலால் பாதித்து வருகின்றனர்.
இதையடுத்து சுகாதாரப் பிரிவு மூலமாக, தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
நேற்று முன்தினம் நடந்த, 105 மருத்துவ முகாம்களில் 4,572 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 29 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
23 இடங்களில், குளோரினேஷன் அளவு பரிசோதிக்கப்பட்டது. மூன்று நாள் மருத்துவ முகாமில், 213 இடங்களில், 11,026 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.