/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
/
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
ADDED : நவ 21, 2025 07:00 AM
போத்தனூர்: கோவை, செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி குப்பை கழிவு ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரி ஒன்று, போத்தனூர் நோக்கி வந்தது.
அன்பு நகர் மாரியம்மன் கோவில் அருகே வரும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியது.
மின் கம்பம் உடைந்து விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த நான்கு மின் கம்பங்கள் சாய்ந்தன. மின் வினியோகம் பாதிக்கப் பட்டது. தகவலறிந்த மின் வாரியத்தினர் அவ்வழித்தடத்தில் மின் வினியோகத்தை தடை செய்தனர்.
தொடர்ந்து நேற்று காலை முதல் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை இப்பணி நீடித்தது. அப்பகுதியிலுள்ள 10 வீடுகள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு மின் வினியோகம் தடைபட்டது.
போக்குவரத்து போலீசார் விசாரணையில், டிரைவர் தொடர்ச்சியாக ஓய்வின்றி வாகனத்தை ஓட்டியதால், தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

