/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் இரண்டு நாள் நடந்த நானோ தொழில்நுட்ப கருத்தரங்கு
/
கல்லுாரியில் இரண்டு நாள் நடந்த நானோ தொழில்நுட்ப கருத்தரங்கு
கல்லுாரியில் இரண்டு நாள் நடந்த நானோ தொழில்நுட்ப கருத்தரங்கு
கல்லுாரியில் இரண்டு நாள் நடந்த நானோ தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : அக் 21, 2024 04:02 AM

கோவை, : கோவை ஈச்சனாரியில் உள்ள ஏ.ஐ.சி., ரைஸ் அடல் இன்குபேஷன் சென்டரில், 'ஹெல்த் கேரில் நானோ பயோடெக்னாலஜியின் வளர்ந்து வரும் பயன்பாடுகள்' எனும் தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கின் முதல் நாள், அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார். இதில், நானோ உயிரித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் இத்துறையின் முக்கியத்துவம் குறித்து, வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.
இதில், அண்ணா பல்கலை திருச்சி தொழில்நுட்ப வளாகம் சார்பில் ருக்மணி, சென்னை பல்கலையின் சார்பில் ரவிசங்கர், பாரதியார் பல்கலை சார்பில், பல விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்வில், ரத்தினம் குழுமத்தின் தலைமை வணிக அதிகாரி நாகராஜ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.