UPDATED : அக் 20, 2026 05:10 PM
ADDED : அக் 20, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
கோவை: பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் (எச்.பி.வி. தடுப்பூசி உட்பட), ஊசி மருந்துகள் அல்லது மாத்திரைகள் வழங்கக் கூடாது என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முறையான தகவல்களை பெற்றோருக்கு அளித்து, எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும். பள்ளியின் பொதுவான ஒப்புதலை, மருத்துவ நடவடிக்கைகளுக்கான அனுமதியாக கருதக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால சூழ்நிலைகளை தவிர, இந்த வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
