/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண், நீர் பரிசோதிக்க வாகனம் வருகிறது
/
மண், நீர் பரிசோதிக்க வாகனம் வருகிறது
ADDED : டிச 16, 2025 05:20 AM
அன்னூர்: மண் மற்றும் நீர் பரிசோத னை செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அன்னூர் வட்டார வேளாண்துறை விடுத்துள்ள அறிக்கை :
மண் மற்றும் நீர் மாதிரி பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, மண்ணில் என்ன உரம் இடவேண்டும், என்ன சத்து குறைவு, நீரில் உப்புத்தன்மை எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு ஏற்ப உரம் இடலாம். வரும் 17ம் தேதி கஞ்சப்பள்ளி மற்றும் அல்லப்பாளையத்தில் உள்ள, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும், 18ம் தேதி எல்லப்பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கும், மண் பரிசோதனை வாகனம் வருகிறது.
விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரி எடுத்து வந்து, பரிசோதனை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

