/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் சிறுத்தை உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
மலைப்பாதையில் சிறுத்தை உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
மலைப்பாதையில் சிறுத்தை உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
மலைப்பாதையில் சிறுத்தை உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : நவ 04, 2024 03:46 AM

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மலைப்பாதையில், சமீப காலமாக காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவற்றை வேட்டையாட, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வருகின்றன.
சமீபத்தில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வரும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, இரவு நேரத்தில், சிறுத்தை ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதை, சுற்றுலா பயணியர் சிலர் அத்துமீறி புகைப்படம் எடுத்து, வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்த வழியாக சுற்றுலா செல்லும் பயணியர், அத்துமீறி வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில், வனவிலங்குகளை காண வனப்பகுதிக்குள், சுற்றுலா பயணியர் அத்துமீறி செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.