sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'

/

 'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'

 'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'

 'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'


ADDED : பிப் 17, 2026 06:43 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கல்வியே வலுவான அடித்தளம்' மாணவர்கள் தரமான கல்வி பெறும் வகையில் கூடுதல் வகுப்பறை, விளையாட்டு உட்கட்மைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, போட்டித் தேர்வுக்கான பயிற்சி, நுாலக வசதி ஏற்படுத்தப்படும். பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பூங்காக்கள் உருவாக்கப்படும். மரக்கன்றுகள் நடப்படும். - ரங்கநாயகி, மேயர்.

'நிரந்தர பணியாளர் நியமிங்க' திட்டச்சாலைகள் உருவாக்கவே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அறிவித்து நிதி ஒதுக்கப்படும். இந்தாண்டு அறிவிக்கவே இல்லை. ஒப்பந்த முறையை கைவிட்டு, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பொதுக்கழிப்பிடம் பராமரிக்கும் பணியை மாநகராட்சியே செய்ய வேண்டும். - சாந்தி, இ.கம்யூ. குழு தலைவர்.

'ஒரு கோடி ரூபாய் ஒதுக்குங்க' அறிவித்துள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; ஒவ்வொன்றுக்கும் கால நிர்ணயம் செய்ய வேண்டும். வார்டு நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். சுகாதார நிலையங்கள் கட்ட வேண்டும். சத்தி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். - ராமமூர்த்தி, மா.கம்யூ. குழு தலைவர்.

'பூங்காவுக்கு முக்கியத்துவம் தாங்க' மாநகராட்சி பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைப்பது வரவேற்கக் கூடியது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் அனைத்து பள்ளிகளிலும் நிறுவ வேண்டும். செம்மொழி பூங்காவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, 100 வார்டுகளில் உள்ள பூங்காக்களுக்கும் அளிக்க வேண்டும். - அழகு ஜெயபாலன், காங்கிரஸ் குழு தலைவர்.

'வளர்ச்சிக்கான பட்ஜெட்' கோவை மக்களுக்கு முற்போக்கு சிந்தனையுடன், நகர வளர்ச்சிக்கேற்ப தாக்கல் செய்துள்ள பட்ஜெட். கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நகர மேம்பாடு, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. - கார்த்திகேயன், தி.மு.க. குழு தலைவர்.

'மேம்பட்ட பசுமை நகரமாகும்' ரூ.123 கோடியில் 289 கி.மீ. நீளத்துக்கு 2,112 சாலைகள் மேம்படுத்தப்படும். 150 இடங்களில் மரக்கன்று நடப்படும். மகளிருக்கு பிங்க் பூங்கா அமைக்கப்படும். 6 இடங்களில் வாரச்சந்தை மேம்படுத்தப்படும். மேம்பட்ட பசுமை நகரமாக மாற்றும் திட்டங்கள் செயல் படுத்தப்படும். - சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர்.






      Dinamalar
      Follow us