/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம கால்நடைகளுக்கு மருத்துவம் :ஓராண்டில் அளப்பரிய மகத்துவம்
/
கிராம கால்நடைகளுக்கு மருத்துவம் :ஓராண்டில் அளப்பரிய மகத்துவம்
கிராம கால்நடைகளுக்கு மருத்துவம் :ஓராண்டில் அளப்பரிய மகத்துவம்
கிராம கால்நடைகளுக்கு மருத்துவம் :ஓராண்டில் அளப்பரிய மகத்துவம்
ADDED : நவ 11, 2025 12:17 AM

மேட்டுப்பாளையம்: 'விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், கால்நடை ஆம்புலன்ஸ் சேவை நன்கு பயன்படுகிறது' என, பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்தாண்டு செப். மாதம், கால்நடை ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தது. அன்னுார், காரமடை, சுல்தான்பேட்டை, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய 6 ஒன்றியங்களுக்கு, தலா ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொலைதுார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கை, அந்தந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கே சென்று அளிக்கப்படுகிறது.
காரமடை வட்டார கால்நடை உதவி மருத்துவர் விமலாதேவி கூறியதாவது:-
நடமாடும் ஆம்புலன்ஸில், கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்டோர் இருப்பர். தினமும் ஒதுக்கீடு செய்யப்படும் கிராமங்களில், கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர அழைப்புக்கு '1962' எண்ணில் அழைக்கலாம்.
காரமடை ஒன்றியத்தில், பெள்ளாதி, பெள்ளேபாளையம், சிக்கதாசம்பாளையம், சிக்கராம்பாளையம், சின்னகள்ளிப்பட்டி, இலுப்பநத்தம், இரும்பொறை, ஜடையம்பாளையம், காளம்பாளையம், மருதுார், கெம்மாரம்பாளையம், மூடுதுறை, நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு என, 17 ஊராட்சிகளில் கடந்தாண்டு செப். மாதம் முதல் நேற்று வரை, 11 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், கால்நடை ஆம்புலன்ஸ் சேவை நன்கு பயன்படுகிறது.- இவ்வாறு, அவர் கூறினார்.---

