/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டி பார்க்க வேண்டுமென கூறி பைக்குடன் வாலிபர் எஸ்கேப்
/
ஓட்டி பார்க்க வேண்டுமென கூறி பைக்குடன் வாலிபர் எஸ்கேப்
ஓட்டி பார்க்க வேண்டுமென கூறி பைக்குடன் வாலிபர் எஸ்கேப்
ஓட்டி பார்க்க வேண்டுமென கூறி பைக்குடன் வாலிபர் எஸ்கேப்
ADDED : ஜன 30, 2025 11:11 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.
கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 21, கூலிதொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ரஞ்சித் என்பவரின், பைக்கில் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அவருடன், மற்றொரு நண்பர் ஜெகதீஷ் சென்றுள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டுக்குள், பொருட்கள் வாங்க வினோத்குமார் சென்றார். அப்போது, பைக் அருகே இருந்த ஜெகதீஷிடம், அடையாளம் தெரியாத நபர் பேச்சுக்கொடுத்து, இதே போன்ற பைக் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், பைக்கை ஓட்டிப்பார்க்க வேண்டுமென கேட்டுள்ளார். அதனால், அடையாளம் தெரியாத நபருடன், அரசம்பாளையம் பிரிவு வரை ஜெகதீஷ் சென்றார். அங்கு, பைக் திருப்புவதற்காக ஜெகதீைஷ இறங்குமாறு கூறியுள்ளார்.
பைக்கிங் இருந்து ஜெகதீஷ் கீழே இறங்கியதும், அடையாளம் தெரியாத நபர் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், ஏமாற்றி பைக்கை திருடியதை உணர்ந்துள்ளார். இதுபற்றி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.