ADDED : செப் 17, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அருண்குமார், 20; கூலி தொழிலாளி.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் சிக்கினார். இதனிடையே அருண்குமார் தனது சித்தப்பா முனியப்பனுடன், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு சென்ற போது, அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.