/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டியே கிடக்கிறது ஆதார் சேவை மையம்
/
பூட்டியே கிடக்கிறது ஆதார் சேவை மையம்
ADDED : செப் 30, 2025 10:58 PM
அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தன.
கடந்த 18 நாட்களாக இம்மையம் பூட்டிக்கிடக்கிறது. கோவில்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆதார் மையத்துக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மையத்தில் பணியாற்றும் ஊழியர் விடுமுறை எடுத்திருப்பதால், பூட்டி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
'மாற்று ஊழியரை நியமித்து, ஆதார் சேவை மையத்தை செயல்படுத்த வேண்டும். தனியார் இ-சேவை மையத்துக்கு சென்றால், கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளது. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது' என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.