தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பல மாதங்கள் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம்

பல மாதங்கள் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம்

பல மாதங்கள் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம்


ADDED : ஆக 25, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: சூலூரில் உள்ள ஆதார் சேவை மையம் ஆபரேட்டர் இல்லாததால், பல மாதங்களாக, பூட்டி கிடக்கிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சூலூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனத்தின் சார்பில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்த ஆபரேட்டர் விடுமுறையில் சென்றார். புதிய ஆபரேட்டர் நியமிக்கப்படாததால், பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் வந்து பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

சூலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் பூட்டி கிடப்பதால், வேறு மையம் எங்குள்ளது எனக்கேட்டு அங்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், தொலை தூர கிராமங்களில் இருந்து வருவோர் அவதிக்குள்ளாகின்றனர். வேறு மையங்களை தேடி சென்றாலும், அங்கு, ஒரு நாளைக்கு, 30 முதல், 40 பேருக்கு மட்டுமே எடுக்கமுடியும், என்கின்றனர். மக்களின் அவதியை போக்க, உடனடியாக புதிய ஆபரேட்டரை நியமித்து, தடையில்லாமல் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து துறை அதிகாரி கூறுகையில்,சூலூர் மையத்துக்கு ஆபரேட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாத கடைசிக்குள், ஆதார் மையம் செயல்பட துவங்கும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us