ADDED : செப் 28, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆடிட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் சதர்ன் இந்தியா அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். தலைவராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு அமைப்பின் துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். செயலாளராக மகேஷ் பிரபு, துணை தலைவராக கமேஷ், பொருளாளராக காசி விஸ்வநாதன், இணை செயலராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டனர்.
இதற்கு முன் வெங்கடேஷ் அமைப்பின் தலைவராக இருந்தார். அப்போது உறுப்பினர்களின் தொழில்முறை மேம்பாடு, திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தியது. மாணவர்களுக்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது குறித்து கூட்டத்தில் பாராட்டப்பட்டது.
