/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து
/
ரோட்டோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து
ADDED : செப் 16, 2025 09:44 PM

கிணத்துக்கடவு; வடசித்தூர், குரும்பபாளையத்திலிருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரம் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து, கொண்டம்பட்டி மற்றும் அரசம்பாளையம் செல்லும் ரோடு குறுகலாகவும், அதிகளவு வளைவுகளாகவும் உள்ளது.
மேலும், இந்த வளைவு பகுதி அருகே, நீர்வழிப்பாதை இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் பலர் தடுமாறி செல்கின்றனர். இதுமட்டுமின்றி வளைவு பகுதிகளில் முறையான அறிவிப்புகளும் இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால், ரோட்டில் பயணிப்பவர்கள் நீர்வழிப் பாதையில் தவறி விழுந்து விபத்துக்கு உள்ளாகவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டின் வளைவுப்பகுதியில் ரிப்ளக்சன் ஏற்படும் வகையில் அறிவிப்பு பலகை மற்றும் நீர்வழிப்பாதை அருகே தடுப்புகள் அமைத்து, விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.