/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில்லா தீபாவளி; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
விபத்தில்லா தீபாவளி; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 15, 2025 11:58 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு, விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினரின் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு அலுவலர் அணில் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
பட்டாசுகளை மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நலன் கருதி, பக்கெட் நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால், தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். கம்பி மத்தாப்பு வாயிலாக தீ பற்ற வைக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும்.
வீடுகளில் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக கெட்டியான ஈரத்துணி மற்றும் ஈர கோணிப்பையை கொண்டு சிலிண்டர் மீது சுற்ற வேண்டும். அப்போது எரியும் தீ அணைந்து விடும். மேலும் பிரிட்ஜ் ஏசியில் தீ விபத்து ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டித்த பின் தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.