ADDED : அக் 18, 2026 05:39 PM

வரதராஜபுரத்தில், வடக்கு வீதி 2ல், இ.எஸ்.ஐ., உள் வளாகத்தில், வாகை மரங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் மீதும் படர்ந்து வளர்ந்திருக்கின்றன. அம்மரங்களின் கிளைகள் வீதியில் நடந்து செல்லும் மக்கள் மீது உடைந்து விழும் நிலையில் உள்ளது.
– வீரமணி, வரதராஜபுரம்.
2. சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் ஆக்கிரமிப்பு
சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில், திருச்சி சாலையில் இருந்து செல்லும் போது முதல் திருப்பத்தில் புதிதாக கட்டிய வீட்டின் முன், சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஏற்கனவே சிறிய சாலையாக இருக்கும் நிலையில் ஆக்கிரமித்து படிகளும், வண்டி ஏறும் ரேம்பும் கட்டி உள்ளனர்.
3. வெள்ளக்கிணறில் ரசீது வழங்கவில்லை
– சரவணன்: மாநகராட்சி 2வது வார்டு வெள்ளக்கிணறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி -2ல் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அர்த்த மண்டபத்தில், வருவாய் துறையின் கீழ் கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா வழங்க முகாம் நடந்தது. இதற்கு கட்டணமாக ரூ.160 வசூலிக்கப்பட்டது. பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கவில்லை.
– மணிமாறன், வெள்ளக்கிணறு.
4. கே.கே.புதுார் நீர் தேக்கம்
கே.கே.புதுார் ராமலிங்கம் நகர் 3வது குறுக்கு தெருவில் மழை பெய்ததால் சாலையில் அதிகளவில் நீர் தேங்கி நிற்கிறது. தெருவில் நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
– சுப்பன் மணி, கே.கே.புதுார்.
5. முல்லை தெருவில் சாலை சேதம்
மகாராணி அவென்யூ முல்லைத் தெருவில், தார் சாலை மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு, ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
– சுகன்யா, முல்லைத் தெரு.
