/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்து
/
பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்து
பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்து
பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்து
ADDED : டிச 23, 2024 04:58 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், குறுகலான ரோடு, சாலை சந்திப்புகளில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
பொள்ளாச்சி நகர ரோடுகளில், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, முக்கிய ரோடுகள், சிக்னல்களில் 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால், நெரிசலை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. அதேபோல, குறுகலான ரோடு, சாலை சந்திப்புகளில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது.
விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு, பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களே காரணமாக உள்ளனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
'டிரைவிங் லைசென்ஸ்' உள்ள பலர், போக்குவரத்து விதியை முழுமையாகத் தெரியாமலும், தெரிந்தாலும் அதை பின்பற்றும் எண்ணம் இல்லாமலும் செயல்படுகின்றனர். நகர எல்லைக்குள் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இருப்பதில்லை.
அதிவேக வாகனங்கள், பல சமயங்களில் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள், குறுகிய மற்றும் நெருக்கடி நிறைந்த ரோடுகளில் நிற்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலுக்கும் சாலை விபத்துகளுக்கும் வழி வகுக்கின்றன.
குறிப்பாக, கோவை, உடுமலை ரோடுகளில் இத்தகைய விதிமீறல் தொடர்கிறது. சாலை பாதுகாப்பு குறித்த அக்கறை பெரும்பாலானவர்களிடம் கிடையாது. போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்கள் இயக்கப்படும்போது, விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இவ்வாறு, கூறினர்.