/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
42 வளைவுகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' நடவடிக்கையால் விபத்துகள் தவிர்ப்பு
/
42 வளைவுகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' நடவடிக்கையால் விபத்துகள் தவிர்ப்பு
42 வளைவுகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' நடவடிக்கையால் விபத்துகள் தவிர்ப்பு
42 வளைவுகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' நடவடிக்கையால் விபத்துகள் தவிர்ப்பு
ADDED : ஏப் 29, 2025 09:24 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க, 42 வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'ரோலர் சேப்டி பேரியர்' அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகளும், குறுகலான சாலைகளும் உள்ளன. சுற்றுலா வாகனங்கள் கவனமுடன் செல்ல, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, வனத்துறை சார்பிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் உள்ள, கொண்டை ஊசி வளைவுகளிலும், சுற்றுலா பயணியரிடையே வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புலிகள் காப்பகத்தில் உள்ள அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் பெயர் சூட்டப்பட்ட விளம்பர பாதகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலை போன்று, வால்பாறை மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில், 'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில், நவீன 'ரோலர் சேப்டி பேரியர்' சுற்றுலா வாகனங்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்று, வால்பாறை மலைப்பாதையிலும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க, 42 ஆபத்தான வளைவுகளில் புதிய வகை 'ரோலர் சேப்டி பேரியர்' அமைக்கபட்டுள்ளது. மஞ்சள் நிறத்திலான இந்த தடுப்பில் வாகனங்கள் மோதினாலும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு, கூறினர்.