/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 164 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ADDED : அக் 03, 2024 08:18 PM
கோவை:
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட கடைகள் மற்றம் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தேசிய விடுமுறை தினமான அக்., 2ல் (காந்தி ஜெயந்தி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில், 192 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில், 75 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 89 உணவு நிறுவனங்கள் உட்பட, 164 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப, அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.