/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : நவ 13, 2024 07:04 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தபால் அலுவலகம் அருகே இருந்த கட்டடத்தை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
பொள்ளாச்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, குழு அமைத்து இடம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ்களை வழங்கினர். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.
கடந்த, 9ம் தேதி முதல்,பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி தபால் அலுவலகம் அருகே கட்டடத்தை இடித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இப்பணிகளைநெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பாளர் சரவணசெல்வம் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பல முறை எச்சரிக்கை மற்றும் நோட்டீஸ் வழங்கியும் கடைகள் அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் முன்வரவில்லை. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த மூன்று நாட்களாக நடக்கிறது.
நடைபாதை ஆக்கிரமிப்பு, கட்டடகள், கடைகளின் மேற்கூரை, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் வரக்கூடாது என, கடை உரிமையாளர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.