/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : செப் 16, 2025 10:16 PM

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்களும், போஸ்டர்களும், அதிகரித்துவிட்டன.
பிளக்ஸ் பேனர்களால் போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன என்பதால் உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனர் வைப்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளில் அனுமதி பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு குறிப்பிட்ட உயரம் மட்டும் வைக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு அன்னுாரில் கைகாட்டி, மேட்டுப்பாளையம் சாலை, கோவை சாலை, சத்தி ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் தினமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. 20 அடி முதல் 40 அடி நீளத்திற்கும் 15 அடி உயரத்திற்கும் பிரம்மாண்டமான பேனர்கள் பாதுகாப்பில்லாத முறையில் வைக்கப்படுகின்றன.
அன்னுார் நகரில் சாலைகளில் மைய தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய தடுப்பான்களின் இருபுறமும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏராளமான போஸ்டர்களை ஒட்டி உள்ளன.
இந்த போஸ்டர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பி விபத்து ஏற்படுத்த வழி வகுக்கின்றன. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. விரைவில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்ற அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.