/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படைத் தள பகுதியில் குப்பைகளை எரித்தால் நடவடிக்கை
/
விமானப்படைத் தள பகுதியில் குப்பைகளை எரித்தால் நடவடிக்கை
விமானப்படைத் தள பகுதியில் குப்பைகளை எரித்தால் நடவடிக்கை
விமானப்படைத் தள பகுதியில் குப்பைகளை எரித்தால் நடவடிக்கை
ADDED : ஜூலை 25, 2025 09:32 PM
சூலுார்; 'சூலுார் விமானப்படை தளத்தை சுற்றிலும், குப்பை மற்றும் கழிவுகளை எரிக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
சூலுாரில் விமானப்படைத்தளம் செயல்படுகிறது. படைத்தளத்தை சுற்றி, 100 மீட்டர் துாரத்துக்கு, கட்டுமான பணிகளை மேற்கொள்ளவோ, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பாதுகாப்பு படையினர் சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம், இரவு, விமா னப்படைத் தளத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோவில் நிலத்தில், கரும்பு சோகைகளை தீ வைத்துள்ளனர். தீ கொழுந்து விட்டு எரிந்து மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற அதிகாரிகள், தீ வைத்த நபர்களை எச்சரித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட பகுதியை ஒட்டி குப்பை மற்றும் கழிவுகளை கொட்டக் கூடாது. எரிக்கவும் கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்,' என்றனர்.