/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'
/
'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'
ADDED : அக் 14, 2025 09:48 PM
மேட்டுப்பாளையம்; வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என காரமடை வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், காரமடை வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்க கூடாது.
இதனால் வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படும் அபாயம் உள்ளது. தீபாவளி கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள், இரவு நேரங்களில் வனப்பகுதி சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம்.
வனப்பகுதிக்குள் பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.-