/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு குழாய் பாதுகாக்க நடவடிக்கை
/
அத்திக்கடவு குழாய் பாதுகாக்க நடவடிக்கை
ADDED : நவ 17, 2025 12:31 AM

அன்னூர்: அத்திக்கடவு திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தண்ணீர் வராத குளம், குட்டைகள் மற்றும் மிகவும் குறைவாக தண்ணீர் வரும் குளம், குட்டைகளில் சிலர் குழாயை சேதப்படுத்தி விடுகின்றனர். சேதமான குழாய் கசிவில் இருந்து வரும் நீரை குளத்தை நிரப்ப பயன்படுத்துகின்றனர். இதனால் பிற பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் செல்வதில்லை. வழக்கமாக ஏர் வால்வு உள்ள தொட்டி கான்கிரீட் சிலாப்புகளால் மூடப்பட்டிருக்கும். தற்போது அந்த ஸ்லாப்புகளுக்கு மேல் இரும்பு பட்டைகளை வைத்து வெல்டிங் செய்துள்ளனர்.
இதனால் இரும்பு பட்டைகளை உடைத்த பிறகே கான்கிரீட் சிலாப்புகளை அகற்றி குழாயை சேதப்படுத்த முடியும். எனவே, இது சிரமம் என்பதால் குழாய் பாதுகாக்கப்படும்.
பிரச்னைக்குரிய குளம், குட்டைகளில் இது போன்ற நடவடிக்கைகளை அத்திக்கடவு திட்ட பொறியாளர்கள் துவக்கி உள்ளனர்

