/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதி மீறிய தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை
/
விதி மீறிய தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை
விதி மீறிய தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை
விதி மீறிய தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை
ADDED : பிப் 05, 2025 12:59 AM

கோவை; மாநகர பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட, தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
கோவை மாநகரில் சில தனியார் பஸ்கள், அனுமதிக்கப்பட்ட வழிதடத்தை தாண்டி, இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நேற்று, நமது நாளிதழ் 'சித்ரா மித்ரா' பகுதியில் செய்தி வெளியானது.
இதையடுத்து, போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையில், போலீசார் நேற்று சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மூன்று தனியார் பஸ்கள் மற்றும் ஒரு மினி பஸ், விதிகளை மீறி அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விதிமீறி இயக்கப்பட்ட பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.