/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உர விற்பனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை பாயும்
/
உர விற்பனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை பாயும்
உர விற்பனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை பாயும்
உர விற்பனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை பாயும்
ADDED : நவ 14, 2025 09:19 PM
கிணத்துக்கடவு: உர விற்பனையில் விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை பாயும், என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் ராபி பருவ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, தென்னை, சோளம், மக்காச்சோளம், காய்கறி என பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான, யூரியா - 274 (மெட்ரிக் டன்), டி.ஏ.பி - 336, பொட்டாஸ் -396, காம்ப்ளக்ஸ் - 377, சூப்பர் பாஸ்பேட் 295 மெட்ரிக் டன் என்ற அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டார அளவில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தரப்பரிசோதனைக்காக உர மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள எம்.ஆர்.பி., விலைக்கு அதிகமாக உரம் விற்பனை செய்தல், விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்தல், இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்வது உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உர விற்பனை குறித்து அனைத்து விற்பனையாளர்களுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உரங்கள் விற்பனையை 'பாயின்ட் ஆப் சேல்' வாயிலாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
இத்தகவலை, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

