/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடிகர் ரஜினியின் ‛'கூலி' ரசிகர்கள் கொண்டாட்டம்
/
நடிகர் ரஜினியின் ‛'கூலி' ரசிகர்கள் கொண்டாட்டம்
ADDED : ஆக 14, 2025 10:05 PM

கோவை; நடிகர் ரஜினியின் 'கூலி' திரைப்படம் நேற்று ரிலீசானதால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித் துள்ள கூலி திரைப்படம் நேற்று வெளியானது. கோவை மாவட்டத்தில், 160 ஸ்கிரீன்களில், சிறப்பு காட்சியாக காலை 9:00 மணிக்கு, திரையிடப்பட்டது.
வழக்கமாக, சாதாரண தியேட்டர்களில் ரூ. 130 முதல் 160 வரை மட்டுமே கட்டணம் பெற வேண்டும்; அதே போல, மல்டி பிளக்ஸ் தியேட்டரில், கட்டணம் 190 ஆக இருக்க வேண்டும் என்பது அரசு வெளியிட்டுள்ள ஆணை. கோவையை பொறுத்தவரை, சாதாரண தியேட்டரில் முன்பதிவில் ரூ.160 முதல் 190 வரையும், மல்டி பிளக்ஸ் தியேட்டரில் அதிகபட்சமாக, 300 வரையும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
திரையிடப்பட்ட தியேட்டர்களில், ரஜினி ரசிகர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். திரைப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்குள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்று, பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவின் போதே, அறிவுறுத்தப்பட்டது.