தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்

 ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்

 ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்


ADDED : ஜூன் 22, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 09:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

ஆடல்வல்லான் நடராஜ பெருமான் அபிஷேக பிரியர். சிவஸ்தலங்களில் தினமும் சிவனின் திருமேனிக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், நடராஜ மூர்த்தியாய் உள்ள பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

அதில் ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரமும் ஒன்று. இந்த மகா அபிஷேகத்தை ஆனி உத்தரத் திருமஞ்சனம் என அழைப்பர்.

இது காலை நேரத்தில் நடக்கும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவாக காட்சி தந்து, திருவாசகம் அருளிய பெருமைக்குரிய நாளாகவும் இது கருதப்படுகிறது

நேற்று ராமநாதபுரம், கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us