sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இதமா ஒரு லெமன் ஜூஸ் போடுங்க: வாட்டும் வெயிலில் வாடக்கூடாது

/

 இதமா ஒரு லெமன் ஜூஸ் போடுங்க: வாட்டும் வெயிலில் வாடக்கூடாது

 இதமா ஒரு லெமன் ஜூஸ் போடுங்க: வாட்டும் வெயிலில் வாடக்கூடாது

 இதமா ஒரு லெமன் ஜூஸ் போடுங்க: வாட்டும் வெயிலில் வாடக்கூடாது


ADDED : மார் 22, 2026 05:48 PM

Google News

ADDED : மார் 22, 2026 05:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், எலுமிச்சை விலை உயர்ந்து தேவை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில், மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. எலுமிச்சையில் இருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், எலுமிச்சை விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் தற்போது எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.50 முதல் ரூ.75 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் கூறுகையில், ''வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் எலுமிச்சை விலை உயரும். நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே விலை உயர்ந்து விட்டது. இனி வரும் நாட்களில் ஒரு கிலோ சுமார் ரூ.200-ஐ எட்டவும் வாய்ப்புள்ளது. மக்களுக்கு எலுமிச்சையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது ஒரு காரணம், என்றனர்.

தேநீர் மற்றும் பழச்சாறு கடை வியாபாரிகள் கூறுகையில், ''கடைக்கு வரும் மக்கள் வெயிலுக்கு, எலுமிச்சையில் இருந்து தயாரிக்கப்படும் பானங்களை விரும்புகின்றனர். பிற பழ வகைகளின் சாறு விலையை காட்டிலும், எலுமிச்சை சாறு விலை குறைவு என்பதால், மக்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது' என்றனர்.------






      Dinamalar
      Follow us