UPDATED : செப் 21, 2026 07:52 PM
ADDED : செப் 21, 2026 07:43 PM
சூலூர் அடுத்த பட்டணத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன், 42; அதே பகுதியில் எலெக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், ஒரு நாள் விடுமுறைக்கு பின் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் இருந்த 35 கிலோ காப்பர் ஒயர் திருடு போனது தெரிந்தது.
நொய்யல் ஆற்றங்கரையில் நான்கு நபர்கள் ஒயர்களை உருக்கி காப்பர் கம்பிகளை எடுத்துக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது, கம்பிகளை எடுத்துக்கொண்டு, நான்கு வாலிபர்கள் தப்பி ஓடினர். அதில் ஒருவரை அடையாளம் கண்டு கொண்ட அவர், சூலூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டணத்தை சேர்ந்த மனோஜ்குமார், 19, வினோத்குமார், 19, நாகராஜ், 20, தயாஷ், 20 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
