/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
/
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : மார் 10, 2024 01:11 AM
கோவை;தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த போலீஸ் எஸ்.பி.,கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, கடந்த சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தலின் போது மோதல்கள் நடைபெற்ற இடங்களில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஓட்டுச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்த எந்திரங்களை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வருதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் ஆகியவை குறித்து, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

