sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

/

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!


UPDATED : பிப் 02, 2025 02:58 PM

ADDED : பிப் 02, 2025 02:44 PM

Google News

UPDATED : பிப் 02, 2025 02:58 PM ADDED : பிப் 02, 2025 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை வேலூரில் பிப்.3ஆம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர்.

ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

Image 1376343


அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

பிப்.1 மற்றும் 2-ம் தேதி ஆற்காட்டில் இருக்கும் ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ளது. பிப். 3-ம் தேதி கருகம்புத்தூர், செண்பாக்கம் டவுன், கோனவட்டம், விருஞ்சிபுரம், பொய்கை, உசூரிலும், 4-ம் தேதி வீர ரெட்டிப்பாளையம், அரியூர், தொரைப்பாடி, வேலூர் கோட்டையிலும், 5-ம் தேதி பென்னாத்தூர், கணியம்பாடி, பாகயாம், விருப்பாச்சிபுரம், வேலப்பாடி, காட்பாடி, சத்துவச்சாரி ஆகிய இடங்களிலும் ஆதியோகியை தரிசனம் செய்யலாம்..

Image 1376344


இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

இதனுடன் 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 மரத்திலான தேர்களை இழுத்தபடி பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளோடு கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதே போல மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தண்டாயுதப்பணி கல்யாண மண்டபத்தில் மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.






      Dinamalar
      Follow us