தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய ஊராட்சிக்கு அலுவலகம் இடம் தேடுகிறது நிர்வாகம்

 புதிய ஊராட்சிக்கு அலுவலகம் இடம் தேடுகிறது நிர்வாகம்

 புதிய ஊராட்சிக்கு அலுவலகம் இடம் தேடுகிறது நிர்வாகம்


ADDED : ஆக 29, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாகப் பிரித்து, புதிய ஊராட்சியாக அறிவித்த ராமேகவுண்டன்புதுார் ஊராட்சிக்கு அலுவலகம் அமைக்க, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இடம் தேர்வு செய்து வருகிறது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் இருந்தன. தேக்கம்பட்டி ஊராட்சி பெரிது என்பதால், மாவட்ட நிர்வாகம், தேக்கம்பட்டி ஊராட்சியை தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதுார் என, இரண்டு ஊராட்சியாக பிரித்தது. தற்போது காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், தோலம் பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், மருதுார், தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதுார், நெல்லித்துறை, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய, 18 ஊராட்சிகள் உள்ளன.

தேக்கம்பட்டி ஊராட்சியில், விவேகானந்தபுரம், தேவனாபுரம், சாலையூர், கெண்டேபாளையம், சீரம்பாளையம், காளியப்பனுார், அரசப்பனுார், மொக்கை நகர், கிட்டம்பாளையம், பஞ்சுக்காடு புதுார், குட்டைபுதுார், தொட்டதாசனுர், தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதுார் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன. புதிதாக பிரித்த ராமேகவுண்டன்புதுார் ஊராட்சியில், குரும்பனுார், அண்ணா நகர், ராமேகவுண்டன்புதுார், ராஜீவ் நகர், தாசம்பாளையம், சாமண்ணா வாட்டர் நகர், வேல் நகர், அருள்ஜோதி நகர், கூடுதுறைமலை, வெல்ஸ்புரம், சமயபுரம், அம்மன் நகர் ஆகிய 12 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

தேக்கம்பட்டி ஊராட்சிக்கு, தேக்கம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. புதிதாகப் பிரித்த ராமேகவுண்டன்புதுார் ஊராட்சியில், 12 கிராமங்கள் உள்ள நிலையில், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், மையமான ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு புதிய ஊராட்சி அலுவலகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், புதிய ஊராட்சிக்கு அலுவலகம் கட்ட, இடம் தேர்வு செய்து வரு கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us