ADDED : செப் 25, 2026 08:30 PM
கோவை: பாரதியார் பல்கலையின் தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தின், கல்வியியல் துறை சார்பில், 2026–28ம் கல்வியாண்டுக்கான பி.எட்., படிப்புக்கான அட்மிஷன் நடக்கிறது.
இப்படிப்பில் சேர அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ முடித்து, தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன், அக்., 13ம் தேதிக்குள் தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தின் https://sde.b-u.ac.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 0422–2428206, 0422–2428216 ஆகிய எண்களிலும், educationcdoe@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
