/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நிவாரண பொருள் பெற தள்ளுமுள்ளு
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நிவாரண பொருள் பெற தள்ளுமுள்ளு
அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நிவாரண பொருள் பெற தள்ளுமுள்ளு
அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நிவாரண பொருள் பெற தள்ளுமுள்ளு
ADDED : மார் 05, 2024 07:15 AM
பல்லடம் : பல்லடத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, தொண்டர்கள் மத்தியில் அடிதடி ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - கணபதிபாளையம், கள்ளிமேடு பகுதியில், அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
வேலுமணி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மின் கிளீனிக், லேப்டாப், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. புதிய திட்டங்கள் கொண்டு வராத தி.மு.க., ஏற்கனவே இருந்த திட்டங்களையும் நிறுத்தி விட்டது.
தி.மு.க.,வுக்கு, 38 எம்.பி.,க்கள் இருந்தும் பயனில்லை. லோக்சபா இருக்கைகளை தேய்த்து கொண்டுள்ளனர். இருப்பினும், எதிர்வரும் தேர்தலில், 40 இடங்களை பிடிப்போம் என்கிறார் ஸ்டாலின். திட்டங்களை சொல்லி ஓட்டுக்கேற்கும் தகுதி அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது.
பீக் ஹவர் மின் கட்டணம் என்று கூறி தொழிலை மொத்தமாக முடித்து விட்டது தி.மு.க., எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாண்டவமாடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, நலத்திட்டங்களை துவக்கி வைத்து விட்டு முன்னாள் அமைச்சர்கள் புறப்பட்டனர். அதன்பின், பயனாளிகள் பொதுக்கூட்ட மேடையை சூழ்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில், மேடையின் மீது ஏறிய பயனாளிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலால், தொண்டர்கள் பயனாளிகளை விரட்டி அடிக்க ஆரம்பித்தனர். இதனால், இரு தரப்பினர் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒட்டு மொத்த பயனாளிகளும் மேடையில் திரண்டதால், சிலருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறி பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

