தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏ.ஐ. கற்றல் திட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏ.ஐ. கற்றல் திட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏ.ஐ. கற்றல் திட்டம்


UPDATED : ஜூன் 22, 2026 10:12 PM

ADDED : ஜூன் 22, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 10:12 PM ADDED : ஜூன் 22, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ இந்தியா: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.ஐ. ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் ஏ.ஐ., ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்று ம் நிறுவனர் சலுார் ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இதன்படி, மாணவர்களுக்காக ஐந்து பருவங்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட ஏ.ஐ., கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். திட்டத்தின் நிறைவில், ஏ.ஐ., ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் வழங்கும் ஜென்ரேட்டிவ் ஏ.ஐ., சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், ஏ.ஐ.,ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்பித் யாதவ், செயற்கை நுண்ணறிவு ஆலோசகரான ஊர்வஸ்க் தஸ்துார், பி.சி.ஏ., ஏ.ஐ., துறைத்தலைவர் ஜினி ஜேம்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us