தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முதலாண்டு மாணவர்களுக்கு  வரவேற்பு

முதலாண்டு மாணவர்களுக்கு  வரவேற்பு

முதலாண்டு மாணவர்களுக்கு  வரவேற்பு


UPDATED : ஜூலை 02, 2026 09:29 PM

ADDED : ஜூலை 02, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 09:29 PM ADDED : ஜூலை 02, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:சுகுணா கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.

கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய விழாவில், மாணவர் அறிமுக நிகழ்வுகள் நடந்தன. கல்லுாரி செயலாளர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன் பேசுகையில்,'' பள்ளியில் இருந்து கல்லுாரிக்கு நுழையும் பருவம், பட்டாம்பூச்சுயின் சிறகுகளை போல, உணர வைக்கும். ஆனால் இப்பருவத்தில் தான் கவனசிதறல் இன்றி கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த துறையை தேர்வு செய்தாலும், அதுசார்ந்த புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். உங்கள் துறை சார்ந்த பரந்துபட்ட அறிவை கற்று கொள்ளும் வாய்ப்பை, சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குத் தேவையான சிறந்த கல்விச் சூழல் மற்றும் நவீன வசதிகளை கல்லூரி தொடர்ந்து வழங்கி வருகிறது,'' என்றார்.

கல்லூரி தாளாளர் லட்சுமிநாராயணசாமி, தலைவர் சுகுணா லட்சுமிநாராயணசாமி, இயக்குநர் சேகர், முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us