/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வேளாண் பொருள் உற்பத்திக்கு அறிவுரை
/
இயற்கை வேளாண் பொருள் உற்பத்திக்கு அறிவுரை
ADDED : டிச 09, 2024 05:00 AM
மேட்டுப்பாளையம்: 'இயற்கை வேளாண் விளை பொருட்களை, அதிகம் பயிர் செய்ய வேண்டும்' என, வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
உழவர் - உற்பத்தியாளர் நிறுவனத்தினர், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், 'இயற்கை நல்லமுது' என்ற வேளாண் விளை பொருட்கள் நேரடி விற்பனை நிலையத்தை திறந்துள்ளனர். கோவை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் மீனாம்பிகை விற்பனை நிலையத்தை, திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''பொதுமக்கள் இயற்கை வேளாண் விவசாய விளை பொருட்களை அதிகம் விரும்புகின்றனர். எனவே விவசாயிகள் இயற்கை விளை பொருட்களை, அதிகம் பயிர் செய்து, தரமான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
விற்பனை நிலையத்தில் விவசாய விளை பொருட்களும், மதிப்பு கூட்டிய வேளாண் பொருட்களும், விற்பனை செய்யப்படுகின்றன.