ADDED : செப் 25, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கோவை: வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் அக். -2ல் துவங்கி வைக்கிறார். அரசு போக்குவரத்து கழகம் கோவை தலைமை அலுவலகத்தில், மேலாண் இயக்குனர் குணசேகரன், கோட்ட மேலாண் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலங்களில் திட்டத்தின் கீழ் பஸ்கள் இயங்கும் வழித்தடம் மற்றும் பஸ்களின் விபரம் குறித்து ஆய்வு செய்து, உரிய முன்னேற்பாடுகள் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சூலுார், பல்லடம் கிளைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் வெற்றி பயண திட்டத்தின் வழிமுறைகளை நேரில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
