/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் : தி.மு.க.வினருக்கு 'அட்வைஸ்'
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் : தி.மு.க.வினருக்கு 'அட்வைஸ்'
வாக்காளர் பட்டியல் திருத்தம் : தி.மு.க.வினருக்கு 'அட்வைஸ்'
வாக்காளர் பட்டியல் திருத்தம் : தி.மு.க.வினருக்கு 'அட்வைஸ்'
ADDED : நவ 25, 2025 05:43 AM

பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், தி.மு.க. ஓட்டுச்சாவடி முகவர்கள் முறையாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த, சில வாரங்களாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள், விண்ணப்ப படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சியினர், தங்களது கட்சியில் ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்து பணிகள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் சிறப்பு முகாம் இரு நாட்கள் நடந்தது.
இப்பணிகளை தி.மு.க.,வினர் முறையாக மேற்கொள்கின்றனரா என, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பார்வையிட்டார்.படிவம் பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவ வேண்டும், இப்பணிகளை கண்காணிக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதேபோன்று, உடுமலை தொகுதிக்கு உட்பட்ட, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில், தி.மு.க.வினர் களப்பணி குறித்து எம்.பி. ஈஸ்வரசாமி ஆய்வு செய்தார். பணிகளை வேகமாக முடித்து கொடுக்க வேண்டும் என கட்சியினருக்கு வலியுறுத்தினார்.
உடுமலை தொகுதி பார்வையாளர் குமார், பேரூராட்சி தலைவர் அகத்துார் சாமி, துணை தலைவர் சையது அபுதாஹிர், வக்கீல் பொன்ராஜ், பாக ஒருங்கிணைப்பாளர் மோகன்சங்கர் பங்கேற்றனர்.

