/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானாவாரி சோளம் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுரை
/
மானாவாரி சோளம் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : செப் 16, 2025 10:16 PM
பெ.நா.பாளையம்; வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கி உள்ளதால், மானாவாரி சோளம் பயிரிட, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால், மானாவாரி சோளம் பயிரிடுவதற்கு தற்போது ஏற்ற பருவமாகும். இப்பருவத்தில் விதைப்பு செய்ய தேவையான சோளம் கே 12 ரக விதைகள் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சின்னதடாகம் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது.
இந்த கே 12 ரக சோளம், இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற வறட்சியை தாங்கும் திறன் கொண்ட சோள வகையாகும். குறிப்பாக, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. மேலும், இதன் சாகுபடி மகசூல் ஏக்கருக்கு, 450 கிலோ வரை இருக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தானியத்துக்கும், கால்நடை தீவனத்துக்கும் பயன்படுத்தலாம். மேலும், தீவன தட்டு ஏக்கருக்கு, 10 டன் வரை கிடைக்கும். கே 12 ரக சோளம் விதைகள், கிலோவுக்கு, 30 ரூபாய் மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயன் அடையலாம்.
இத்தகவலை பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர் கோமதி, துணை வேளாண் அலுவலர் விஜய கோபால் ஆகியோர் தெரிவித்தனர்.