/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தல்
/
உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தல்
உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தல்
உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 22, 2025 10:11 PM
சூலூர்: தொடர் மழை எதிர்பார்க்கப் படுவதால்,உரமிடுதல், பூச்சி மருந்து, களைக்கொல்லி மருந்து தெளித்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, விவசாயிகளுக்கு சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிக்கை :
பருவ மழை துவங்கியுள்ளதை ஒட்டி, தொடர்ச்சியாக மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பயிர்களுக்கு உரமிடுதல், பூச்சி கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மழை நீரை பண்ணை குட்டை அமைத்து சேகரிப்பதன் மூலம், தேவைப்படும் போது பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.
வயல்களில் மழை நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். காற்றினால், வாழைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க , மரத்தின் கீழ் மண் அணைக்க வேண்டும். மரத்தின் கீழ் சுத்தம் செய்து வடிகால் அமைக்க வேண்டும். 75 சதவீதம் வளர்ந்து முதிர்ந்த தார்களை அறுவடை செய்வது நல்லது.
தென்னை மரங்களில் மரத்தின் கீழ் சுற்றில் உள்ள ஓலைகள் மற்றும் மட்டைகளை வெட்டி மரத்தின் சுமையை குறைத்தால், காற்றினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.
இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது.

