/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜவுளி துறையை மேம்படுத்த ஆலோசனை குழு அமைப்பு
/
ஜவுளி துறையை மேம்படுத்த ஆலோசனை குழு அமைப்பு
ADDED : அக் 10, 2025 12:42 AM
கோவை; கோவை லீ மெரிடியனில் கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை சார்பில், தொழில் நுட்ப ஆலோசனைக்குழுவின் இரண்டாவது கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது: கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் சார்பில் தமிழகத்தின் ஜவுளித்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினர்.
முதல்வர் உத்தரவுக்கிணங்க ஜவுளித்துறை சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னோடி தொழில் முதலீட்டாளர்கள் கொண்ட தொழில் நுட்ப ஆலோசனைக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
ஜவுளித்தொழிலின் பல்வேறு பிரிவுகளான நூற்பு, நெசவு, பின்னலாடை, பதனிடுதல், ஆயத்த ஆடை மற்றம் தொழில் நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் தீர்வுகள் குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
தொழில் நுட்ப ஆலோசனைக்குழுவின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிந்ததுடன், இப்பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
கூட்டத்தில் கைத்தறி துறை செயலர் அமுதவல்லி, துணிநூல் துறை இயக்குநர் லலிதா, கைத்தறி இயக்குநர் மகேஸ்வரி மற்றும் வல்லுநர்கள், முன்னோடி தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.