/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'20 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது'
/
'20 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது'
'20 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது'
'20 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது'
ADDED : நவ 09, 2025 12:51 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய, 'கன்னியகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு' என்ற நுால் குறித்து, பேராசிரியர் கந்தசுப்ரமணியம் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். மீனவ மக்களின் வாழ்க்கை பற்றிய, 'கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு' என்ற ஆய்வு நுாலை, பேராசிரியர் வறீதையா கான்ஸ்டன்டைன் எழுதி இருக்கிறார். இந்த நுாலாசிரியர், கடல் சார்ந்த நிலப்பகுதி பற்றியும், அந்த பகுதியில் வாழும் மக்கள் பற்றியும் அதிக நுால்களை எழுதியவர்.
வறீதையா இந்த நுாலை, மானுடவியல் ஆய்வு நோக்கில், இன வரைவியல் அடிப்படையில் எழுதி இருக்கிறார். மீன் பிடிக்கும் சமூக மக்களிடம் ஏற்படும் நவீன வாழ்வியல் மாற்றம் பற்றி விரிவான பதிவுகள் உள்ளன.
குறிப்பிட்ட முக்குவர் சமூக மக்களை பற்றி மட்டும் இல்லாமல், அனைத்து மீனவ மக்களின் வாழ்வியல் மாற்றங்களையும், இந்த நுால் சித்தரிக்கிறது. சங்க கால வேட்டை சமூகம் போலவே, நெய்தல் நிலத்தில் மீன் பிடித்தலும் ஒரு வேட்டையாகதான் இருந்துள்ளது.
வேட்டையாடிய உணவை, எல்லோரும் பங்கிட்டுக்கொள்வது போல், மீன் பிடித்தலிலும் பங்கிட்டு உண்டு வாழ்ந்துள்ளனர். அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை, நெய்தல் நிலத்தில் வாழும் மீனவர்களின் சமூக வாழ்க்கை, பண்பாடு, சடங்கு முறைகள், அவர்கள் பேசும் மொழி இந்த காலச்சூழலில் எப்படி மாறி உள்ளது என்பதை, இந்த நுால் ஆய்வு நோக்கில் விளக்குகிறது.
இந்த நுாலை படித்தால் கடல் பற்றியும், மீன் பிடி தொழில் பற்றியும் முழுமையாக வாசகர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கே, அவர்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத பல விஷயங்கள் இந்த நுாலில் உள்ளன.
இந்தியாவில் முதல் முறையாக மீன்பிடி விசைப்படகு, தமிழகத்தில் குளச்சல் துறைமுகத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் இந்த நுாலில் உள்ளது. காமராஜர் அமைச்சரவையில் லுார்தம்மாள் மீன் வளத்துறை அமைச்சராக இருந்த போது, விசைப்படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழிலில் விசைப்படகு வந்த பிறகு மிகப்பெரிய மாற்றமும், முன்னேற்றமும் வந்தது. ஆனால் அதே நேரத்தில் மீனவர்கள் கையில் இருந்த மீன் வர்த்தகம், ஏஜென்டுகள் கைக்கு மாறிவிட்டது. இதனால் மீனவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படவில்லை.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு, கடலின் இயற்கை சூழலை அழிப்பதால், கடலுக்கும், கடல் வளத்துக்கும் பெரும் கேடு ஏற்படும் என்கிறார் இந்நுாலாசிரியர். இதை தடுக்கவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது என்கிறார். இப்படி, இந்த நுாலில் கடல் சார்ந்து பல தகவல்கள் உள்ளன.
கடலில் 39 வகையான காற்று வீசுவதாக மீனவர்கள் கணித்து வைத்துள்ளனர். அந்த காற்றால் மீனவர்களுக்கு ஏற்படும் சாதக பாதகம் பற்றி மீனவர்கள் அறிந்து வைத்து இருப்பதையும், பல நுாற்றாண்டுகளாக கடல் பற்றிய நுண்ணறிவு, மீனவர்களிடம் இருந்துள்ளது என்பதையும, இந்த நுாலை வாசிப்பது மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் குறிப்பாக, கேரளாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கம் எப்படி இருந்தது, மீனவர்களை எப்படி அதற்கு தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதையும் இந்த நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்ட கிராமத்து இளைஞர்களிடம் கபடி விளையாட்டு எப்படி வளர்ந்தது என்பது போல், மீனவ இளைஞர்களிடம் கால்பந்து மற்றும் வாலிபால் விளையாட்டு எப்படி மாற்றத்தை தந்தது என்பதையும், கடலோடு அலை போல் பிணைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வாழ்க்கையையும், இந்த நுால் அழகாக சொல்கிறது.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு, கடலின் இயற்கை சூழலை அழிப்பதால், கடலுக்கும், கடல் வளத்துக்கும் பெரும் கேடு ஏற்படும் என்கிறார் இந்நுாலாசிரியர். இதை தடுக்கவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடலில் மீன் இனப்பெருக்கம் இருக்காது.

